
🙌 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம்!
என் அன்பிற்குரிய நண்பர்களே,
📖 கர்த்தர் வேதத்தின் வழியாக அனுதினமும் என்னோடு பேசுகிற சில காரியங்களை உங்களுடைய பிரயோஜனத்திற்காகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்த பிளாக்.
🎤 சமீபத்தில் ஒரு வாலிபர் கூட்டத்தில் நான் பகிர்ந்து கொண்ட “தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” என்ற செய்தியை உங்களோடும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
📖 மத்தேயு 22:14-ல் இயேசுவானவர்,
“அழைக்கப்பட்டவர்கள் அனேகர்; தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர்”
என்று கூறுகிறார்.
இந்த வசனத்தை வாசித்தபோது,
❓ “ஆண்டவர் சொல்லும் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார்?”
❓ “அவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களை உடையவர்கள்?”
என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
அப்போது ஆவியானவர் 1 தெசலோனிக்கேயர் 1:2-4 வசனங்களை நினைவுபடுத்தினார்:
“உங்கள் விசுவாசத்தின் கிரியையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும் நினைவுகூர்ந்து… தேவனால் நேசிக்கப்பட்ட சகோதரரே, நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று அறிந்திருக்கிறோம்.”
🙌 அல்லேலூயா!
⏳ 1. நம்பிக்கையின் பொறுமை
இன்றைய தெரிந்துகொள்ளப்பட்ட வாலிபர்களுக்கு மிகவும் அவசியமான குணாதிசயங்களில் ஒன்று:
🕰️ “பொறுமை”
👑 தாவீது என்ற வாலிபனை ஆண்டவர் 1 சாமுவேல் 16:12-ல் இராஜாவாக அபிஷேகம் செய்தார்.
ஆனால் அவர் உண்மையில் இராஜாவாக ஆக்கப்படுவது 2 சாமுவேல் 5:3-ல் தான்.
📅 இந்த இரண்டிற்கும் இடையில் பல வருடங்கள் கடந்திருக்கலாம்.
அந்த காலகட்டத்தில் தாவீது:
⚔️ உபத்திரவங்களை சந்தித்தான்.
😢 கண்ணீரை அனுபவித்தான்.
🏃 ஓடிப்பிழைத்தான்.
👤 அவனை அபிஷேகம் செய்த சாமுவேல் மரித்தார்.
🗡️ சவுல் அவனை கொல்லத் தொடர்ந்து முயன்றான்.
⚔️ பெலிஸ்தருடன் யுத்தங்கள் நடந்தன.
👑 ஆனால் பல வருடங்களான காத்திருப்பின் பின்னரே அவர் இராஜாவானார்.
💭 உங்களுடைய வாழ்க்கையிலும் இதேபோல் இருக்கலாம்
🙏 “கர்த்தர் என்னை உயர்த்துவார்” என்ற நம்பிக்கையோடு நீங்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
ஆனால் இன்று:
🌍 உலகத்தோடும்,
⚔️ பாவத்தோடும்,
😔 போராடிக்கொண்டிருக்கலாம்.
ஒருவேளை நீங்கள் கேட்கலாம்:
❓ “என் வாழ்க்கையில் ஆசீர்வாதம் வருமா?”
ஆனால் நினைவில் கொள்ளுங்கள்:
👑 இவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு இராஜாவானதால்தான் தாவீது தனது இறுதிவரை நிலைத்திருந்தான்.
அதுபோல,
🔥 கர்த்தரும் உங்களை பக்குவப்படுத்தி,
⏰ சரியான நேரத்தில் உயர்த்துவார்.
💍 ஒருவேளை கர்த்தர் உங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கலாம்
💑 ஒருவேளை கர்த்தர் உங்களுக்கு ஏற்ற துணையை தருவதற்காக உங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கலாம்.
ஆனால் நீங்கள்:
⚠️ பொறுமையை இழந்து,
🤝 சுயமாக ஒரு உறவை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்கலாம்.
அப்படியானால்:
🙏 அதை ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து ஜெபியுங்கள்.
✨ எந்த சூழ்நிலையையும் மாற்ற வல்லவர் கர்த்தர்.
💬 என்னுடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை நான் கடந்து வந்திருக்கிறேன்.
❤️ 2. அன்பின் பிரயாசம்
📖 வேதம் கூறுகிறது:
“அவனவன் தனக்கானவைகளை மாத்திரம் தேடாமல், பிறருக்கானவைகளையும் தேடுவானாக.”
நாமும்:
🙏 மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
🗣️ ஆலோசனை கூற வேண்டும்.
🤝 தேற்ற வேண்டும்.
🎁 அவர்களுடைய தேவைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
சிறிய உதவிகள்கூட:
🌱 ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
🌍 தேசத்திற்காக ஜெபிப்பதும் அன்பின் பிரயாசமே
🇮🇳 தேசத்திற்காக ஜெப நேரம் ஒதுக்கி மன்றாடுவதும் அன்பின் பிரயாசமே.
🛡️ பாவத்திற்கும் உலகத்திற்கும் அடிமையாகாமல் நம்மை காத்துக்கொள்வதும் ஆண்டவர்மேல் நாம் வைக்கும் அன்பின் வெளிப்பாடாகும்.
🙏 அவரிடம் உதவி கேளுங்கள்;
❤️ அவர் நிச்சயமாக உதவி செய்வார்.
✝️ 3. விசுவாசத்தின் கிரியை
நாம்:
🙌 “ஆண்டவரை நம்புகிறோம்”
என்று சொன்னால்,
அது:
👀 நம்முடைய கிரியைகளிலும்,
🌟 சாட்சிய வாழ்க்கையிலும்,
வெளிப்பட வேண்டும்.
⚠️ சாட்சிய வாழ்க்கையின் முக்கியத்துவம்
எனக்கு தெரிந்த ஒரு வாலிபன்,
👥 சில விசுவாசிகளின் சாட்சியமற்ற வாழ்க்கையை பார்த்து,
🚶♂️ சத்திய பாதையை விட்டு விலகிப்போனான்.
🗣️ எவ்வளவு பேசியும் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை.
🐍 அது சாத்தான் அவனுக்காக வைத்த வலையாக இருந்தது.
🕊️ நமது வாழ்க்கை மற்றவர்களுக்கு தடையாக இருக்கக்கூடாது
நாம்:
❌ தடைக்கற்களாக இல்லாமல்,
✅ சாட்சிகளாக வாழ வேண்டும்.
🛡️ நம்முடைய சாட்சிய வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும்.
🙇♂️ சுயத்திற்கு இடம் கொடுக்காமல்,
✝️ ஆண்டவரை சார்ந்து வாழ வேண்டும்.
💔 தவறுகளுக்குப் பிறகும் கிருபை உண்டு
சில நேரங்களில்:
😔 நானும் தவறி,
😢 பின்னர் வருந்தியதுண்டு.
🙏 சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்ட அனுபவமும் எனக்கு உண்டு.
📖 ஏனெனில்,
ஆண்டவர் தம்மிடம் தாழ்மையாய் திரும்புகிறவர்களை உயர்த்துகிறவர்.
🌟 முடிவுரை
மேலே நாம் கவனித்த இந்த குணாதிசயங்களை:
📚 நாமும் நம்முடைய வாழ்க்கையில் அப்பியாசித்து,
🙌 ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாய் வாழ முயற்சிப்போம்.
🙏 கர்த்தர் நம்மை:
📞 அழைத்ததோடு மட்டும் அல்லாமல்,
❤️ அவருக்குப் பிரியமான
👑 தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகவும்
வாழ கிருபை செய்வாராக.
📖 நினைவில் கொள்ள வேண்டிய மூன்று குணாதிசயங்கள்
⏳ நம்பிக்கையின் பொறுமை
❤️ அன்பின் பிரயாசம்
✝️ விசுவாசத்தின் கிரியை
இவையே:
👑 தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் அடையாளங்கள்.
🙌 கர்த்தருக்கே மகிமை!
ஆமென்.








Leave a Reply